انْطَلَقْتُ مَعَ خَالَتِي إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي يَدِهَا سِوَارَانِ مِنْ ذَهَبٍ – أَوْ قَالَتْ: قُلْبَانِ مِنْ ذَهَبٍ – فَقَالَ لِي: «أَيَسُرُّكِ أَنْ يُجْعَلَ فِي يَدِكِ سِوَارَانِ مِنْ نَارٍ؟» فَقُلْتُ لَهَا: يَا خَالَتِي، أَمَا تَسْمَعِينَ مَا يَقُولُ؟ قَالَتْ: وَمَا يَقُولُ؟ قُلْتُ: يَقُولُ: ” أَيَسُرُّكِ أَنْ يُجْعَلَ فِي يَدَيْكِ سِوَارَانِ مِنْ نَارٍ – أَوْ قَالَ: قُلْبَانِ مِنْ نَارٍ -؟، ” قَالَتْ: فَانْتَزَعَتْهُمَا، فَرَمَتْ بِهِمَا، فَلَمْ أَدْرِ أَيُّ النَّاسِ أَخَذَهُمَا؟
27604. அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது :
ஒரு தடவை நான், எனது சின்னம்மாவுடன் நபி (ஸல்) அவர்களைக் காண சென்றேன். எனது சின்னம்மா இரு தங்க காப்புகளை அணிந்திருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து மறுமையில் நெருப்பாலான இரு தங்க காப்புகள் உனக்கு அணிவிக்கப்படுவது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று கேட்டார்கள்.
உடனே நான் எனது சின்னம்மாவிடம் , அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை செவியேற்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு, என் சின்னம்மா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்? என்று கேட்டார்கள். மறுமையில் நெருப்பாலான இரு தங்க காப்புகள் உனக்கு அணிவிக்கப்படுவது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா? என்று சொன்னதை கூறினேன்.
உடனே என் சின்னம்மா அவ்விரண்டு தங்கக் காப்புகளையும் கழற்றி எறிந்து விட்டார்கள். அவ்விரண்டையும் வேறு யார் எடுத்தார்கள் என்பதும் எனக்கு தெரியாது.