🔗

முஸ்னது அஹ்மத்: 27614

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

دَخَلْتُ أَنَا وَخَالَتِي عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهَا أَسْوِرَةٌ مِنْ ذَهَبٍ، فَقَالَ لَنَا: «أَتُعْطِيَانِ زَكَاتَهُ؟» قَالَتْ: فَقُلْنَا: لَا، قَالَ: «أَمَا تَخَافَانِ أَنْ يُسَوِّرَكُمَا اللَّهُ أَسْوِرَةً مِنْ نَارٍ؟ أَدِّيَا زَكَاتَهُ»


27614. அஸ்மா பின்த் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும், எனது சின்னம்மா அவர்களும் நபி (ஸல்) அவர்களை காண சென்றோம். எனது  சின்னம்மா தங்க காப்பு அணிந்திருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீங்கள் இதற்குரிய ஸகாத்தை நிறைவேற்றி விட்டீர்களா?  என்று கேட்டார்கள். நாங்கள் இல்லை என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு மறுமையில் நெருப்பாலான காப்பை மாட்டிவிடுவதை நீங்கள் பயப்படமாட்டீர்களா? அதற்குரிய ஸகாத்தை நிறைவேற்றுங்கள்,” எனக் கூறினார்கள்.