يَا نَبِيَّ اللَّهِ أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ فَقَالَ: «أَرْضُ الْمَنْشَرِ، وَالْمَحْشَرِ ائْتُوهُ فَصَلُّوا فِيهِ فَإِنَّ صَلَاةً فِيهِ كَأَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ» قَالَتْ: أَرَأَيْتَ مَنْ لَمْ يُطِقْ أَنْ يَتَحَمَّلَ إِلَيْهِ أَوْ يَأْتِيَهُ قَالَ: «فَلْيُهْدِ إِلَيْهِ زَيْتًا يُسْرَجُ فِيهِ، فَإِنَّ مَنْ أَهْدَى لَهُ كَانَ كَمَنْ صَلَّى فِيهِ»
27626. நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது ஒன்றுத்திரட்டப்படும் இடம், உயிர்பிக்கப்படும் இடம். அங்கு சென்று நீங்கள் தொழுதுக்கொள்ளுங்கள். ஏனெனில் அங்கு ஒரு தொழுகை தொழுவது ஏனைய பள்ளிகளில் தொழும் தொழுகையை விட 1000 மடங்கு சிறந்தது என்று கூறினார்கள்.
அதற்கு மைமூனா அவர்கள், அங்கு சென்று தொழமுடியாதவர் என்ன செய்வது? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக ஆலிவ் எண்ணெயை அனுப்புங்கள். அவ்வாறு அனுப்புபவர் அதில் தொழுதவரைப் போன்றவராவார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபூ ஸவ்தா