خَطَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَطًّا بِيَدِهِ، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ مُسْتَقِيمًا» ، قَالَ: ثُمَّ خَطَّ عَنْ يَمِينِهِ، وَشِمَالِهِ، ثُمَّ قَالَ: «هَذِهِ السُّبُلُ، لَيْسَ مِنْهَا سَبِيلٌ إِلَّا عَلَيْهِ شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ» ثُمَّ قَرَأَ: (وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ)
4437. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தன் கையால் ஒரு கோட்டை வரைந்தார்கள். பிறகு, “இதுவே அல்லாஹ்வின் நேரான வழியாகும்” என்று கூறினார்கள்.
தொடர்ந்து அதன் வலது புறத்திலும் இடது புறத்திலும் பல கோடுகளை வரைந்தார்கள். பிறகு, “இவை பல வழிகளாகும். இவற்றில் ஒவ்வொரு வழியிலும் ஒரு ஷைத்தான் இருந்து கொண்டு அதன் பக்கம் (மக்களை) அழைக்கிறான்” என்று கூறிவிட்டு, பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:
“இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.” (அல்குர்ஆன் 6:153)