🔗

முஸ்னது அஹ்மத்: 4524

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

كَانَ أَبِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِذَا أَتَى الرَّجُلَ وَهُوَ يُرِيدُ السَّفَرَ، قَالَ لَهُ: ادْنُ حَتَّى أُوَدِّعَكَ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوَدِّعُنَا، فَيَقُولُ: «أَسْتَوْدِعُ اللَّهَ دِينَكَ وَأَمَانَتَكَ وَخَوَاتِيمَ عَمَلِكَ»


4524.

என்னுடைய தந்தை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் பிரயாணம் செய்யும் மனிதரிடத்தில் வந்தால் அவரிடத்தில் (பின்வருமாறு) கூறுவார்கள். ”அருகில் வாருங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை வழியனுப்பி வைத்ததைப் போல் நான் உங்களை அனுப்பி வைக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் (ஒருவரை வழியனுப்பும் போது) உங்களுடைய மார்க்கத்தையும் அமானிதத்தையும் இறுதி செயல்களையும் பாதுகாக்க நான் அல்லாஹ்விடம் வேண்டுகிறேன் என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஸாலிம் பின் அப்துல்லாஹ்