🔗

முஸ்னது அஹ்மத்: 4700

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ نَاسًا دَخَلُوا عَلَى ابْنِ عَامَرٍ فِي مَرَضِهِ فَجَعَلُوا يُثْنُونَ عَلَيْهِ، فَقَالَ ابْنُ عُمَرَ: أَمَا إِنِّي لَسْتُ بِأَغَشِّهِمْ لَكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى لَا يَقْبَلُ صَدَقَةً مِنْ غُلُولٍ وَلَا صَلَاةً بِغَيْرِ طُهُورٍ»


4700. முஸ்அப் பின் ஸஃத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்களில் சிலர் இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களை உடல்நலம் விசாரிப்பதற்காக சென்றனர். அவர்களில் சிலர், இப்னு ஆமிர் (ரஹ்) அவர்களைப் புகழ்ந்தனர். அப்போது (அங்கிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் “நான் அவர்களைப் போன்று உம்மை ஏமாற்ற விரும்பவில்லை. ஏனெனில், “மோசடி செய்த பொருளால் செய்யப்படும் எந்த தானதர்மத்தையும்; அங்கத் தூய்மை (உளூ) செய்யாமல் தொழும் எந்தத் தொழுகையையும் பாக்கியமிக்க உயர்ந்தோன் அல்லாஹ் ஏற்கமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். (நீங்கள் பஸ்ராவி(ன் ஆட்சிப் பொறுப்பி)ல் இருந்தீர்கள்)