” إِذَا بَلَغَ الرَّجُلُ الْمُسْلِمُ أَرْبَعِينَ سَنَةً، آمَنَهُ اللَّهُ مِنْ أَنْوَاعِ الْبَلَايَا: مِنَ الْجُنُونِ، وَالْبَرَصِ، وَالْجُذَامِ. وَإِذَا بَلَغَ الْخَمْسِينَ لَيَّنَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْهِ حِسَابَهُ، وَإِذَا بَلَغَ السِّتِّينَ، رَزَقَهُ اللَّهُ إِنَابَةً يُحِبُّهُ عَلَيْهَا، وَإِذَا بَلَغَ السَّبْعِينَ، أَحَبَّهُ اللَّهُ وَأَحَبَّهُ أَهْلُ السَّمَاءِ، وَإِذَا بَلَغَ الثَّمَانِينَ، تَقَبَّلَ اللَّهُ مِنْهُ حَسَنَاتِهِ وَمَحَا عَنْهُ سَيِّئَاتِهِ، وَإِذَا بَلَغَ التِّسْعِينَ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ وَسُمِّيَ أَسِيرَ اللَّهِ فِي الْأَرْضِ وَشُفِّعَ فِي أَهْلِهِ “
5626. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு முஸ்லிம் நாற்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரைப் பல வகையான நோய்களிலிருந்து பாதுகாப்பான்; பைத்தியம், தொழுநோய், வெண்புள்ளி போன்ற நோய்களிலிருந்து அவரைப் பாதுகாப்பான்.
அவர் ஐம்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரது விசாரணையை எளிதாக்குவான். அவர் அறுபது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரிடம் பாவமீட்சியை வழங்குவான். அதன் காரணமாக அல்லாஹ் அவரைநேசிப்பான்.
அவர் எழுபது வயதை அடைந்தால், அல்லாஹ்வும் வானவர்களும் அவரை நேசிப்பார்கள். அவர் எண்பது வயதை அடைந்தால், அல்லாஹ் அவரது நற்செயல்களை ஏற்றுக்கொள்வான். அவரது தீமைகளை அழிப்பான்.
அவர் தொண்ணூறு வயதை அடைந்தால், அவரது முந்திய, பிந்திய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான். மேலும் அவர் பூமியில் அல்லாஹ்வின் கைதி என்று அழைக்கப்படுவார். அவர் (மறுமையில்) தனது குடும்பத்தினருக்காக பரிந்துரை செய்யவும் அனுமதிக்கப்படுவார்.