«إِنَّا أُمَّةٌ أُمِّيَّةٌ لَا نَكْتُبُ وَلَا نَحْسُبُ، وَإِنَّ الشَّهْرَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا» ، ثُمَّ نَقَصَ وَاحِدَةً فِي الثَّالِثَةِ
6129. நாம் உம்மி சமுதாயமாவோம். நமக்கு எழுதவும் தெரியாது. எண்ணவும் தெரியாது. மாதம் என்பது இப்படியும் இப்படியும் இப்படியும் இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி இரு கைகளையும் மூன்று தடவை விரித்து மடக்கினார்கள். மூன்றாவது தடவை கட்டை விரலை மடக்கி 29 (நாட்கள்) என்று குறிப்பிட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)