أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ، قَالَ لَهُ: «اقْرَأْ ثَلَاثًا مِنْ ذَاتِ الر» ، فَقَالَ الرَّجُلُ: كَبِرَتْ سِنِّي، وَاشْتَدَّ قَلْبِي، وَغَلُظَ لِسَانِي، قَالَ: «فَاقْرَأْ مِنْ ذَاتِ حم» فَقَالَ: مِثْلَ مَقَالَتِهِ الْأُولَى، فَقَالَ: «اقْرَأْ ثَلَاثًا مِنَ الْمُسَبِّحَاتِ» ، فَقَالَ: مِثْلَ مَقَالَتِهِ، فَقَالَ الرَّجُلُ: وَلَكِنْ أَقْرِئْنِي يَا رَسُولَ اللَّهِ سُورَةً جَامِعَةً فَأَقْرَأَهُ: إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ حَتَّى إِذَا فَرَغَ مِنْهَا قَالَ الرَّجُلُ: وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، لَا أَزِيدُ عَلَيْهَا أَبَدًا، ثُمَّ أَدْبَرَ الرَّجُلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَفْلَحَ الرُّوَيْجِلُ، أَفْلَحَ الرُّوَيْجِلُ» ، ثُمَّ قَالَ: عَلَيَّ بِهِ، فَجَاءَهُ، فَقَالَ لَهُ: «أُمِرْتُ بِيَوْمِ الْأَضْحَى، جَعَلَهُ اللَّهُ عِيدًا لِهَذِهِ الْأُمَّةِ» ، فَقَالَ الرَّجُلُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَجِدْ إِلَّا مَنِيحَةَ ابْنِي، أَفَأُضَحِّي بِهَا؟ قَالَ: «لَا، وَلَكِنْ تَأْخُذُ مِنْ شَعْرِكَ، وَتُقَلِّمُ أَظْفَارَكَ، وَتَقُصُّ شَارِبَكَ، وَتَحْلِقُ عَانَتَكَ، فَذَلِكَ تَمَامُ أُضْحِيَّتِكَ عِنْدَ اللَّهِ»
6575.
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு (தொழுகையில் ஓதுவதற்கு ஏதேனும் சூராவை) கற்றுத் தாருங்கள்’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அலிஃப் லாம் ரா எனத்தொடங்கும் சூராக்களில் மூன்றை ஓதுவீராக’ என்று கூறினார்கள். அதற்கு அவர், ‘நான் வயது முதிர்ந்தவனாக ஆகி விட்டேன். எனது உள்ளம் (அதை மனனம் செய்ய இயலாதவாறு) கடினமாகிவிட்டது. எனது நாவும் (ஓதுவதற்கு) கடினமாகி விட்டது’ என்று கூறினார்.
அதற்கு நபியவர்கள் ‘ஹாமீம் என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓது!’ என்று கூறினார்கள். அதற்கு அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார். நபி (ஸல்) அவர்கள் ‘சப்பஹ அல்லது யுசப்பிஹு என்று ஆரம்பமாகும் சூராக்களில் ஏதேனும் மூன்றை ஓதுவீராக!’ என்று கூறிய போதும் அவர் (முன்பு) கூறியதைப் போன்றே கூறினார்.
பிறகு அவர், ‘அல்லாஹ்வின் தூதரே! (அனைத்து விஷயங்களையும்) உள்ளடக்கிய ஒரு சூராவை எனக்கு கற்றுத் தாருங்கள் என்று கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள், ‘இதா ஸுல்லித்தில் அர்லு ஸில்ஸாஹா’ என்ற சூராவை முழுமையாக ஓதிக் காண்பித்தார்கள். அம்மனிதர், ‘உண்மையுடன் உங்களை அனுப்பியவனின் மீது சத்தியமாக இதற்கு மேல் ஒரு போதும் நான் அதிகமாக்க மாட்டேன்’ என்று கூறி விட்டு திரும்பிச் சென்று விட்டார். அதற்கு நபியவர்கள், ‘ருவைஜில் வெற்றி பெற்று விட்டார்’ என்று இரு முறை கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)