🔗

முஸ்னது அஹ்மத்: 6645

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

كُنَّا عِنْدَ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِي، وَسُئِلَ: أَيُّ الْمَدِينَتَيْنِ تُفْتَحُ أَوَّلًا: الْقُسْطَنْطِينِيَّةُ أَوْ رُومِيَّةُ؟ فَدَعَا عَبْدُ اللَّهِ بِصُنْدُوقٍ لَهُ حَلَقٌ، قَالَ: فَأَخْرَجَ مِنْهُ كِتَابًا، قَالَ: فَقَالَ عَبْدُ اللَّهِ: بَيْنَمَا نَحْنُ حَوْلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكْتُبُ، إِذْ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْمَدِينَتَيْنِ تُفْتَحُ أَوَّلًا: قُسْطَنْطِينِيَّةُ أَوْ رُومِيَّةُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَدِينَةُ هِرَقْلَ تُفْتَحُ أَوَّلًا» يَعْنِي قُسْطَنْطِينِيَّةَ


6645. அபூகபீல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம் இருந்த போது அவர்களிடம், “கான்ஸ்டாண்டிநோபிள் நகரம், ரோம் நகரம் இவ்விரண்டு நகரங்களில் எது முதலில் வெற்றிக்கொள்ளப்படும்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஒரு -பெட்டியை கொண்டு வரச் செய்து அதிலிருந்து ஒரு ஏட்டை எடுத்தார்கள்.

(பின்பு) அவர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சுற்றி அமர்ந்துக்கொண்டு அவர்கள் கூறுவதை எழுதுவோம். (அப்போது ஒரு தடவை) கான்ஸ்டாண்டிநோபிள் நகரம், ரோம் நகரம் இவ்விரண்டு நகரங்களில் எது முதலில் வெற்றிக்கொள்ளப்படும்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஹிர்க்கல் மன்னனின் நகரமான கான்ஸ்டாண்டிநோபிள் தான் என்று பதிலளித்தார்கள்” எனக் கூறினார்கள்.