🔗

முஸ்னது அஹ்மத்: 6656

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

تُوُفِّيَ رَجُلٌ بِالْمَدِينَةِ، فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا لَيْتَهُ مَاتَ فِي غَيْرِ مَوْلِدِهِ» ، فَقَالَ رَجُلٌ مِنَ النَّاسِ: لِمَ يَا رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الرَّجُلَ إِذَا تُوُفِّيَ فِي غَيْرِ مَوْلِدِهِ قِيسَ لَهُ مِنْ مَوْلِدِهِ إِلَى مُنْقَطَعِ أَثَرِهِ، فِي الْجَنَّةِ»


6656. மதீனாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்து சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு அந்தளவு இடம் அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)