🔗

முஸ்னது அஹ்மத்: 734

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

سَأَلَ رَجُلٌ عَلِيًّا عَنِ الْبَقَرَةِ، فَقَالَ: عَنْ سَبْعَةٍ. فَقَالَ: مَكْسُورَةُ الْقَرْنِ؟ فَقَالَ: لَا يَضُرُّكَ. قَالَ: الْعَرْجَاءُ؟ قَالَ: «إِذَا بَلَغَتِ الْمَنْسَكَ فَاذْبَحْ، أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ الْعَيْنَ وَالْأُذُنَ»


734. ஹுஜய்யா பின் அதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அலீ (ரலி) அவர்களிடம் மாடு (எத்தனை பேருக்காகக் குர்பானி கொடுக்கப்படலாம் என்பது) பற்றிக் கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “ஏழு பேருக்காக” என்று கூறினார்கள்.

அம்மனிதர், “அதன் கொம்பு உடைந்திருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அது உனக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது (அதாவது, அது கூடும்)” என்றார்கள்.

மீண்டும் அம்மனிதர், “அது நொண்டியாக இருந்தால்?” என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், “அது அறுக்குமிடம் வரை (தன்னால் நடந்து) வந்துவிட்டால், நீ அதனை அறுத்துவிடு” (அது கூடும்) என்று கூறிவிட்டு,

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குர்பானி பிராணியின் கண்களையும், காதுகளையும் உன்னிப்பாக கவனித்து வாங்குமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள்” என்று சொன்னார்கள்.