🔗

முஸ்னது அஹ்மத்: 7584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«فَضْلُ صَلَاةِ الْجَمَاعَةِ عَلَى صَلَاةِ أَحَدِكُمْ وَحْدَهُ خَمْسَةً وَعِشْرِينَ جُزْءًا»


7584. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது, உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதைவிட இருபத்தைந்து பங்கு அதிகச் சிறப்புடையதாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

இப்னு ஷிஹாப் அவர்களிடமிருந்து அறிவிக்கும் இப்ராஹீம் பின் ஸஃத் அவர்கள், இதை நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) கூறியதாக அறிகிறேன் என்று அறிவிக்கிறார்.

ஆனால் இப்னு ஷிஹாப் அவர்களிடமிருந்து அறிவிக்கும்  யஃகூப் பின் இப்ராஹீம் அவர்கள், இந்த சந்தேகம் இல்லாமல் அறிவிக்கிறார் என அஹ்மத் இமாம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஹ்மத் கூறுகிறார்.