🔗

முஸ்னது அஹ்மத்: 7625

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

إِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ عَبْدًا قَالَ لِجِبْرِيلَ: إِنِّي أُحِبُّ فُلَانًا، فَأَحِبَّهُ “، قَالَ: ” فَيَقُولُ جِبْرِيلُ لِأَهْلِ السَّمَاءِ: إِنَّ رَبَّكُمْ يُحِبُّ فُلَانًا، فَأَحِبُّوهُ “، قَالَ: «فَيُحِبُّهُ أَهْلُ السَّمَاءِ» ، قَالَ: «وَيُوضَعُ لَهُ الْقَبُولُ فِي الْأَرْضِ» ، قَالَ: «وَإِذَا أَبْغَضَ، فَمِثْلُ ذَلِكَ»


7625. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு அடியானை அல்லாஹ் நேசிக்கும் பொழுது ஜிப்ரீல் (அலை) அவர்களை அழைத்து, ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான். எனவே, நீங்களும் அவரை நேசியுங்கள்!’ என்று கூறுவான். எனவே, ஜிப்ரீல் (அலை) அவர்கள் விண்ணகத்தில் வசிப்பவர்களிடம், ‘அல்லாஹ் இன்னாரை நேசிக்கிறான்; நீங்களும் அவரை நேசியுங்கள்’ என்று அறிவிப்பார்கள். உடனே, விண்ணக்கத்தாரும் அவரை நேசிப்பார்கள். பிறகு அவருக்கு பூமியிலும் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது.

ஒரு அடியானை அல்லாஹ் வெறுக்கும் பொழுது இவ்வாறே அல்லாஹ் கூறுவான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)