كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقْسِمُ تَمْرًا مِنْ تَمْرِ الصَّدَقَةِ، وَالْحَسَنُ بْنُ عَلِيٍّ فِي حِجْرِهِ، فَلَمَّا فَرَغَ حَمَلَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عَاتِقِهِ، فَسَالَ لُعَابُهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَرَفَعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ، فَإِذَا تَمْرَةٌ فِي فِيهِ، فَأَدْخَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَهُ فَانْتَزَعَهَا مِنْهُ، ثُمَّ قَالَ: «أَمَا عَلِمْتَ أَنَّ الصَّدَقَةَ لَا تَحِلُّ لِآلِ مُحَمَّدٍ»
7758. அபூஹுரைரா (ரலி) கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தர்மப்பொருளாக வந்த பேரீச்சம்பழங்களைப் பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். ஹஸன் பின் அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மடியில் இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் (பங்கிட்டு) முடித்ததும், ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களைத் தமது தோளின் மீது சுமந்தார்கள். அப்போது, ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களின் எச்சில் நபி (ஸல்) அவர்கள் மீது வழிந்தது.
நபி (ஸல்) அவர்கள் தமது தலையை உயர்த்தியபோது, ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களின் வாயில் ஒரு பேரீச்சம்பழம் இருப்பதைக் கண்டார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் தமது கையை நுழைத்து அதை ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களிடமிருந்து எடுத்தார்கள். பிறகு, “முஹம்மதுடைய குடும்பத்தாருக்கு தர்மம்பொருள் ஆகுமானதல்ல என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.