«الْمَرْءُ عَلَى دِينِ خَلِيلِهِ، فَلْيَنْظُرْ أَحَدُكُمْ مَنْ يُخَالِطُ»
وَقَالَ مُؤَمَّلٌ: «مَنْ يُخَالِلُ»
8028. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு மனிதன் தன் நண்பனின் வழியிலேயே இருக்கிறான். ஆகவே, உங்களில் ஒருவர், தாம் யாருடன் நட்பு கொள்கிறோம் என்பதைக் கவனிக்கட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ, முஅம்மல் பின் இஸ்மாயீல் ஆகியோரில், முஅம்மல் அவர்கள், ஸுஹைர் பின் முஹம்மத் அவர்களின் பெயருடன் அல்குராஸானீ என்று கூறியுள்ளார். மேலும் مَنْ يُخَالِلُ – “தாம் யாருடன் நட்பு கொள்கிறோம்” என்ற வார்த்தையை அறிவித்துள்ளார்.
(அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ அவர்கள், مَنْ يُخَالِطُ – தாம் யாருடன் வாழ்கிறார்-பழகுகிறார் என்ற வார்த்தையை அறிவித்துள்ளார்)