أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بِتَمَرَاتٍ، فَقُلْتُ: ادْعُ اللَّهَ لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ، قَالَ: فَصَفَّهُنَّ بَيْنَ يَدَيْهِ، قَالَ: ثُمَّ دَعَا، فَقَالَ لِي: «اجْعَلْهُنَّ فِي مِزْوَدٍ، فَأَدْخِلْ يَدَكَ، وَلَا تَنْثُرْهُ» قَالَ: «فَحَمَلْتُ مِنْهُ كَذَا وَكَذَا وَسْقًا فِي سَبِيلِ اللَّهِ، وَنَأْكُلُ، وَنُطْعِمُ، وَكَانَ لَا يُفَارِقُ حَقْوِي، فَلَمَّا قُتِلَ عُثْمَانُ رَضِيَ اللَّهُ عَنْهُ، انْقَطَعَ عَنْ حَقْوِي، فَسَقَطَ»
8628. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருநாள் நான் சில பேரீச்சம்பழங்களை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து, “இவற்றில் பரக்கத் உண்டாகும்படி எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள் அந்தப் பழங்களை தம் முன் ஒழுங்குபடுத்தி வைத்தார்கள். பிறகு பிரார்த்தனை செய்தார்கள். பின்னர் என்னிடம், “இவற்றை ஒரு பையில் வைத்துக்கொள். அதில் உன் கையை உள்ளே விட்டு எடுத்துக்கொள். அவற்றைச் சிதறவிடாதே” என்று கூறினார்கள்.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “நான் அதிலிருந்து அல்லாஹ்வுடைய பாதையில் இத்தனை இத்தனை வஸ்க் அளவு (சுமார் 120 கிலோ) பயன்படுத்தியிருக்கிறேன். நாங்கள் சாப்பிடுவோம், (பிறருக்கும்) உணவளிப்போம். அது என் இடுப்பை விட்டுப் பிரியாமல் இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது, அது என் இடுப்பிலிருந்து துண்டிக்கப்பட்டு கீழே விழுந்துவிட்டது.