🔗

முஸ்னது அஹ்மத்: 8713

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لِثَوْبَانَ: «كَيْفَ أَنْتَ يَا ثَوْبَانُ، إِذْ تَدَاعَتْ عَلَيْكُمُ الْأُمَمُ كَتَدَاعِيكُمْ عَلَى قَصْعَةِ الطَّعَامِ تُصِيبُونَ مِنْهُ؟» قَالَ ثَوْبَانُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، أَمِنْ قِلَّةٍ بِنَا؟ قَالَ: «لَا، بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ، وَلَكِنْ يُلْقَى فِي قُلُوبِكُمُ الْوَهَنُ» قَالُوا: وَمَا الْوَهَنُ؟ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «حُبُّكُمُ الدُّنْيَا وَكَرَاهِيَتُكُمُ الْقِتَالَ»


8713. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸவ்பானே! நீங்கள் பசியோடு இருக்கும்போது ஒருவருக்கொருவர் உணவுத் தட்டை நோக்கி அழைப்பது போன்று, (எதிரி) சமூகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து (உங்களுக்கெதிராக மற்றவர்களை) அழைக்கும் நிலை ஏற்பட்டால் உங்கள் நிலை எப்படி இருக்குமோ! என்று கூறினார்கள். அதற்கு ஸவ்பான் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ‘அந்நேரம் நாங்கள் எண்ணிக்கை குறைந்தவர்களாக இருப்போமா?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘இல்லை, அந்நேரம் நீங்கள் எண்ணிக்கை கூடியவர்களாக இருப்பீர்கள். என்றாலும் உங்கள் உள்ளங்களிலே ‘வஹ்ன்’ போடப்பட்டிருக்கும் என்று கூறினார்கள். அப்போது மக்கள், அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?’ என்றுக் கேட்க, ‘உலகத்தை நேசிப்பதும், போரை வெறுப்பதும் தான் அது என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)