«مَا كَانَ أَحَدٌ أَعْلَمَ بِحَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي، إِلَّا مَا كَانَ مِنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، فَإِنَّهُ كَانَ يَكْتُبُ بِيَدِهِ، وَيَعِيهِ بِقَلْبِهِ، وَكُنْتُ أَعِيهِ بِقَلْبِي، وَلَا أَكْتُبُ بِيَدِي، وَاسْتَأْذَنَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْكِتَابِ عَنْهُ، فَأَذِنَ لَهُ»
9231. நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் எவரும் என்னை விட அதிகமான ஹதீஸ்களை அறிந்திருக்கவில்லை; அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்களைத் தவிர. காரணம் அவர் (ஹதீஸ்களை) எழுதி வைத்துக் கொள்வார். நினைவிலும் வைத்துக்கொள்வார். நான் நினைவில் வைத்துக்கொள்வேன்; கையால் எழுதி வைக்கமாட்டேன்; அவர் நபி (ஸல்) அவர்களிடம் ஹதீஸ்களை எழுதிக்கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அவருக்கு எழுத அனுமதி தந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: முஜாஹித் (ரஹ்), முகீரா பின் ஹகீம் (ரஹ்)