«إِنَّ لِلْمَسَاجِدِ أَوْتَادًا الْمَلَائِكَةُ جُلَسَاؤُهُمْ، إِنْ غَابُوا يَفْتَقِدُونَهُمْ، وَإِنْ مَرِضُوا عَادُوهُمْ ، وَإِنْ كَانُوا فِي حَاجَةٍ أَعَانُوهُمْ»
9424. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பள்ளிவாசல்களுக்கு (மனிதர்களில்) சிலர் தூண்களைப் போன்று இருப்பார்கள். வானவர்கள் அவர்களின் சபைத்தோழர்களாக இருப்பார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்கு வராவிட்டால் வானவர்கள் அவர்களைத் தேடுவார்கள். அவர்கள் நோயாளியாகி விட்டால் வானவர்கள் அவர்களை நலம் விசாரிப்பார்கள். அவர்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் வானவர்கள் அவர்களுக்கு உதவுவார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)