قَالَ يَحيَى: قَالَ مَالِكٌ: الأَمْرُ عِنْدَنَا، أَنَّ الْمُسْتَحَاضَةَ إِذَا صَلَّتْ، أَنَّ لِزَوْجِهَا أَنْ يُصِيبَهَا، وَكَذَلِكَ النُّفَسَاءُ إِذَا بَلَغَتْ أَقْصَى مَا يُمْسِكُ النِّسَاءَ الدَّمُ، فَإِنْ رَأَتِ الدَّمَ بَعْدَ ذَلِكَ، فَإِنَّهُ يُصِيبُهَا زَوْجُهَا، وَإِنَّمَا هِيَ بِمَنْزِلَةِ الْمُسْتَحَاضَةِ.
162. தொடர் இரத்தப் போக்கு உள்ள பெண் தொழுது விட்டால், அவளின் கணவனுக்கு அவளிடம் உடலுறவு கொள்வது கூடும். இவ்வாறே, குழந்தை பெற்ற பெண்கள், அவளுக்கு வெளிப்படும் இரத்தம் முடியும் நாள் அடைந்ததும், அதன் பின்னும் ரத்தத்தை அவள் பார்த்தால், அவளை அவளது கணவன் உடலுறவு கொள்ளலாம். அவள், இரத்தப் போக்குடையவளின் நிலையில் உள்ளவள் ஆவாள். இதுவே எம்மிடம் உள்ள சட்டமாகும் என மாலிக் (ரஹ்) அவர்கள் கூறியதாக யஹ்யா கூறுகின்றார்கள்.