🔗

முஅத்தா மாலிக்: 180

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

وَسُئِلَ مَالِكٌ عَن تَثْنِيَةِ الأَذَانِ وَالإِقَامَةِ، وَمَتَى يَجِبُ الْقِيَامُ عَلَى النَّاسِ حِينَ تُقَامُ الصَّلاَةُ؟ فَقَالَ: لَمْ يَبْلُغْنِي فِي النِّدَاءِ وَالإِقَامَةِ إِلاَّ مَا أَدْرَكْتُ النَّاسَ عَلَيْهِ، فَأَمَّا الإِقَامَةُ، فَإِنَّهَا لاَ تُثَنَّى، وَذَلِكَ الَّذِي لَمْ يَزَلْ عَلَيْهِ أَهْلُ الْعِلْمِ بِبَلَدِنَا،

وَأَمَّا قِيَامُ النَّاسِ حِينَ تُقَامُ الصَّلاَةُ، فَإِنِّي لَمْ أَسْمَعْ فِي ذَلِكَ بِحَدٍّ يُقَامُ لَهُ، إِلاَّ أَنِّي أَرَى ذَلِكَ عَلَى قَدْرِ طَاقَةِ النَّاسِ، فَإِنَّ مِنْهُمُ الثَّقِيلَ وَالْخَفِيفَ، وَلاَ يَسْتَطِيعُونَ أَنْ يَكُونُوا كَرَجُلٍ وَاحِدٍ.


180. பாங்கு இகாமத்தில் இரண்டிரண்டு வாசகங்களாக கூறுவது பற்றி கேட்கப்பட்டதற்கு, மதீனாவாசிகள் பாங்கு – இகாமத் விஷயத்தில் கடைபிடிப்பதே எனக்கு செய்தியாகக் கிடைத்தது. இகாமத்தின் வாசகம் இரண்டிரண்டாகக் கூறப்படக் கூடாது. இது தான் நம் ஊர் அறிஞர்களின் நிலையாகும்.

தொழுகைக்காக இகாமத் கூறப்படும் போது மக்கள் எழுவது என்பது. இது விஷயமாக இதற்கான அளவு எதையும் நான் கேட்கவில்லை. எனினும் இதில் மக்களுக்கு இயலும் நிலை தான் நேரம் என்றே கருதுகின்றேன். காரணம் அவர்களில் வலிமையானவரும், பலவீனரும் உள்ளனர். ஒரே மனிதன் போல் எல்லோரும் இருக்க இயல மாட்டார்கள் என்று மாலிக் (ரஹ்) கூறினார்கள்.