🔗

முஅத்தா மாலிக்: 2833

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

إِنَّ اللهَ يَرْضَى لَكُمْ ثَلاَثًا، وَيَسْخَطُ لَكُمْ ثَلاَثًا: يَرْضَى لَكُمْ أَنْ تَعْبُدُوهُ، وَلاَ تُشْرِكُوا بِهِ شَيْئًا، وَأَنْ تَعْتَصِمُوا بِحَبْلِ اللهِ جَمِيعًا، وَأَنْ تَنَاصَحُوا مَنْ وَلاَّهُ اللهُ أَمْرَكُمْ، وَيَسْخَطُ لَكُمْ: قِيلَ وَقَالَ، وَإِضَاعَةَ الْمَالِ، وَكَثْرَةَ السُّؤَالِ.


பாடம்: 78

பொருளை விரையமாக்குவது, இரட்டைவேடமிடுவது (ஆகியவை) குறித்து வந்துள்ளவை.

2833. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் உங்களிடத்தில் மூன்று விசயங்களை விரும்புகிறான். மூன்று விசயங்களை வெறுக்கிறான்.

1 . நீங்கள் அவனுக்கு இணைவைக்காமல் வணங்குவதையும்;

2 . பிரிந்துவிடாமல் அல்லாஹ்வின் கயிற்றை நீங்கள் அனைவரும் பற்றிப் பிடிப்பதையும்;

3 . உங்களின் காரியத்திற்கு யாரை அவன் பொருப்பாளனாக நியமித்துள்ளானோ அவருக்கு நீங்கள் நலம் நாடுவதையும் அல்லாஹ் உங்களிடத்தில் விரும்புகிறான்.

1 . (ஆதாரமில்லாமல்) இவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என்று கூறுவதையும்;

2 . பொருளை விரையமாக்குவதையும்;

3 . (தேவையில்லாமல்) அதிகமாகக் கேள்வி கேட்பதையும் அல்லாஹ் உங்களிடத்தில் வெறுக்கிறான்.

அறிவிப்பவர்: அபூஸாலிஹ் (ரஹ்)