ادْلُلْنِي عَلَى بَعِيرٍ مِنَ الْمَطَايَا أَسْتَحْمِلُ عَلَيْهِ أَمِيرَ الْمُؤْمِنِينَ، فَقُلْتُ: نَعَمْ جَمَلاً مِنَ الصَّدَقَةِ، فَقَالَ عَبْدُ اللهِ بْنُ الأَرْقَمِ: أَتُحِبُّ أَنَّ رَجُلاً بَادِنًا فِي يَوْمٍ حَارٍّ غَسَلَ لَكَ مَا تَحْتَ إِزَارِهِ وَرُفْغَيْهِ، ثُمَّ أَعْطَاكَهُ فَشَرِبْتَهُ؟ قَالَ: فَغَضِبْتُ، وَقُلْتُ: يَغْفِرُ اللهُ لَكَ، أَتَقُولُ لِي مِثْلَ هَذَا؟ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ الأَرْقَمِ: إِنَّمَا الصَّدَقَةُ أَوْسَاخُ النَّاسِ يَغْسِلُونَهَا عَنهُمْ.
2858. அஸ்லம் அல்அதவீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் அர்கம் (ரலி) அவர்கள், அமீருல் முஃமினீன்-இறைநம்பிக்கையாளர்களின் தலைவருக்காக பயணம் செய்வதற்கேற்ற ஒட்டகத்தை எனக்கு காட்டுங்கள்! என்று என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், ஸகாத் ஒட்டகம் இருக்கிறது. (அதைத் தரவா?) என்று கூறினேன்.
அதற்கவர்கள், குண்டான மனிதர் கடுமையான வெயில் காலத்தில் தனது வேட்டியிலிருந்து தொடை வரை உள்ள பகுதிகளைக் கழுவி அதை உமக்கு கொடுத்தால் அதை நீ குடிப்பாயா? என்று கேட்டார்கள். உடனே நான் கோபமடைந்து, அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்னிடம் இது போன்ற வார்த்தைகளை சொல்கிறீர்களே? (இது முறையா?) என்று கூறினேன். அதற்கவர்கள், “ஸதகா, ஸகாத் எனும் தர்மப்பொருட்கள் மக்களின் அழுக்குகளாகும். (அதை வழங்குவதின் மூலம்) தங்களை கழுவிக்கொள்கிறார்கள்” என்று கூறினார்கள்.