لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَنَا أَحْمَدُ، وَأَنَا الْمَاحِي، الَّذِي يَمْحُو اللهُ بِيَ الْكُفْرَ، وَأَنَا الْحَاشِرُ، الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا الْعَاقِبُ.
பாடம்: 89
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர்கள்.
2861. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு ஐந்து பெயர்கள் உள்ளன.
1 . நான் முஹம்மது – புகழப்பட்டவர் – ஆவேன்.
2 . நான் அஹ்மத் – இறைவனை அதிகமாகப் புகழ்பவர் ஆவேன்.
3 . நான் மாஹீ – அழிப்பவர் ஆவேன். என் மூலமாக அல்லாஹ் இறைமறுப்பை அழிக்கிறான்.
4 . நான் ஹாஷிர் – ஒன்று திரட்டுபவர் ஆவேன். மக்கள் எனக்குப் பின்னால் ஒன்று திரட்டப்படுவார்கள்.
5 . நான் ஆகிப் (இறைத்தூதர்களில்) இறுதியானவர் ஆவேன்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)