شَهِدْتُ الْأَضْحَى وَالْفِطْرَ مَعَ أَبِي هُرَيْرَةَ «فَكَبَّرَ فِي الرَّكْعَةِ الْأُولَى سَبْعَ تَكْبِيرَاتٍ قَبْلَ الْقِرَاءَةِ، وَفِي الْآخِرَةِ خَمْسَ تَكْبِيرَاتٍ قَبْلَ الْقِرَاءَةِ»
قَالَ مَالِكٌ: «وَهُوَ الْأَمْرُ عِنْدَنَا»
495. நான் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் இரண்டிலும் அபூஹுரைரா(ரலி) அவர்களுடன் கலந்திருக்கிறேன். அவர்கள் (பெருநாள் தொழுகையில்) முதல் ரக்அத்தில் (அல்ஹம்து சூரா) ஓதும் முன் (அதிகபட்சமாக) 7 தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்திலும் ஓதும் முன் 5 தக்பீர் கூறினார்கள் என நாபிஉ கூறுகின்றார்கள்.
‘இது நம்மிடத்திலும் சட்டமாகும் என மாலிக் (ரஹ்) கூறுகிறார்கள்.