وسُئِلَ مَالِكٌ عَنِ امْرَأَةٍ قَرَأَتْ سَجْدَةً، وَرَجُلٌ مَعَهَا يَسْمَعُ، أَعَلَيْهِ أَنْ يَسْجُدَ مَعَهَا؟ قَالَ مَالِكٌ: لَيْسَ عَلَيْهِ أَنْ يَسْجُدَ مَعَهَا، إِنَّمَا تَجِبُ السَّجْدَةُ عَلَى الْقَوْمِ يَكُونُونَ مَعَ الرَّجُلِ يَأْتَمُّونَ بِهِ، فَيَقْرَأُ سَجْدَةً، فَيَسْجُدُونَ مَعَهُ، وَلَيْسَ عَلَى مَنْ سَمِعَ سَجْدَةً مِنْ إِنْسَانٍ يَقْرَؤُهَا، لَيْسَ لَهُ بِإِمَامٍ أَنْ يَسْجُدَ تِلْكَ السَّجْدَةَ.
556. ஸஜ்தா வசனத்தை ஒரு பெண் ஓதுகிறார். அதை ஒருவர் கேட்கிறார். இதற்காக இவரும் ஸஜ்தா செய்ய வேண்டுமா? என்று கேட்கப்பட்டதற்கு, ”ஸஜ்தா செய்ய இவருக்கு அவசியமில்லை. ஸஜ்தா ஒரு கூட்டத்தார் மீது கடமை என்பது, அவர்கள் இவருடன் உள்ளனர். அவரை இமாமாக பின் தொடர்கின்றனர். ஸஜ்தா வசனத்தை அவர் ஓதினால் அவருடன் சேர்ந்து இவர்களும் ஸஜ்தா செய்ய வேண்டும். இமாமாக இல்லாத நிலையில் ஒருவர் தனிப்பட்டவனாக ஸஜ்தா வசனத்தை ஓதிட ஒருவர் கேட்டால் அவருக்கு ஸஜ்தா செய்வது கடடாயமில்லை”” என்று மாலிக் (ரஹ்) பதில் கூறினார்கள்.