🔗

முஅத்தா மாலிக்: 573

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ. كَمَا يُعَلِّمُهُمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ، يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»


573. குர்ஆனிலிருந்து ஒரு அத்தியாயத்தை மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்தது போல், இந்த (பின்வரும்) துஆவையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.

அவர்கள் கூறினார்கள்:

”அல்லாஹும்ம இன்னீ அஊது பிக மின் அதாபி ஜஹன்னம். வ அஊது பிக மின் அதாபில் கப்ர். வ அஊது பிக மின் ஃபித்னதில் மஸீஹித் தஜ்ஜால். வ அஊது பிக மின் ஃபித்னதில் மஹ்யா வல்மமாத்”

(பொருள்: அல்லாஹ்வே! நிச்சயமாக நான் நரக வேதனை, மண்ணறை வேதனை, மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனை, வாழ்வின் சோதனை, மரணத்தின் சோதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)