«صَلُّوا فِي بُيُوتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا»
அத்தியாயம்: 20
இரவிலும், பகலிலும் உபரியானத் தொழுகையைத் தொழுதல்.
பாடம்:
இல்லங்களில் (சிலதொழுகைகளைத்) தொழுவதற்கு வந்துள்ள தூண்டலும், அதன் சிறப்பும்.
1598. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுடைய இல்லங்களிலும் (உங்கள் தொழுகைகளில் சிலவற்றைத்) தொழுங்கள். இல்லங்களை (தொழுகை நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கிவிடாதீர்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)