كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوتِرُ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى، وَقُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ، وَقُلْ هُوَ اللَّهُ أَحَدٌ، فَإِذَا أَرَادَ أَنْ يَنْصَرِفَ قَالَ: «سُبْحَانَ الْمَلِكِ الْقُدُّوسِ» ثَلَاثًا يَرْفَعُ بِهَا صَوْتَهُ،
1752. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (3 ரக்அத்) வித்ரு தொழுகையில் முதல் ரக்அத்தில் ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா (என்ற திருக்குர்ஆனின் 87 வது) அத்தியாயத்தையும், இரண்டாவது ரக்அத்தில் குல் யாஅய்யுஹல் காஃபிரூன் (என்ற 109 வது) அத்தியாயத்தையும், மூன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹத் (என்ற 112 வது) அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள்.
தொழுகையை முடிக்கும்போது, மூன்று முறை சத்தமாக “ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ்” (பொருள்: பேரரசனான, மகா தூய்மையான அல்லாஹ் குறைகளற்றவன்) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அப்ஸா (ரலி)
அபூஅப்துர்ரஹ்மான் (ஆகிய நஸாயீ இமாம்) கூறுகிறார்:
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அபூநுஐம் அவர்கள் எங்களுடைய பார்வையில் முஹம்மத் பின் உபைத், காஸிம் பின் யஸீத் ஆகியோரைவிட மிகவும் பலமானவர்.
எங்களுடைய பார்வையில் இந்த ஹதீஸை அறிவிக்கும் ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் மாணவர்களில் மிகவும் பலமானவர்கள் (வரிசை முறை-அல்லாஹ்வே மிக அறிந்தவன்) யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான், அவருக்குப் பிறகு அப்துல்லாஹ் பின் முபாரக், பிறகு வகீஃ பின் ஜர்ராஹ், பிறகு அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, பிறகு அபூநுஐம், பிறகு அஸ்வத் ஆகியோர் ஆவார்கள்.
மேலும், ஸுபைத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஜரீர் பின் ஹாஸிம் அவர்கள், “(நபி-ஸல்-அவர்கள்) மூன்றாவது முறை (ஸுப்ஹானல் மலிகில் குத்தூஸ் என்று கூறும்போது) தன் குரலை உயர்த்தி, நீட்டி கூறுவார்கள்” என்று அறிவித்தார்.