🔗

நஸாயி: 190

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنَّ أَبَا طَالِبٍ مَاتَ. فَقَالَ: «اذْهَبْ فَوَارِهِ». قَالَ: إِنَّهُ مَاتَ مُشْرِكًا. قَالَ: «اذْهَبْ فَوَارِهِ». فَلَمَّا وَارَيْتُهُ رَجَعْتُ إِلَيْهِ، فَقَالَ لِي: «اغْتَسِلْ»


பாடம்:

இணைவைப்பாளரை அடக்கம் செய்த பின்னர் குளித்துக் கொள்வது.

190. அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அபூதாலிப் இறந்துவிட்டார்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீர் சென்று அவரை அடக்கம் செய்யும்” என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், “அவர் ஒரு இணைவைப்பாளராக இறந்துவிட்டாரே” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “நீர் சென்று அவரை அடக்கம் செய்யும்” என்று கூறினார்கள்.

(அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:) “நான் அவரை அடக்கம் செய்துவிட்டு நபியவர்களிடம் திரும்பிச் சென்றபோது, அவர்கள் என்னிடம், ‘குளித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: நாஜியா பின் கஅப் (ரஹ்)