🔗

நஸாயி: 1985

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آخَى بَيْنَ رَجُلَيْنِ، فَقُتِلَ أَحَدُهُمَا وَمَاتَ الْآخَرُ بَعْدَهُ، فَصَلَّيْنَا عَلَيْهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا قُلْتُمْ؟» قَالُوا: دَعَوْنَا لَهُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ، اللَّهُمَّ ارْحَمْهُ، اللَّهُمَّ أَلْحِقْهُ بِصَاحِبِهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَأَيْنَ صَلَاتُهُ بَعْدَ صَلَاتِهِ؟ وَأَيْنَ عَمَلُهُ بَعْدَ عَمَلِهِ؟ فَلَمَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»
قَالَ عَمْرُو بْنُ مَيْمُونٍ: أَعْجَبَنِي لِأَنَّهُ أَسْنَدَ لِي


1985. உபைத் பின் காலித் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு நபர்களுக்கு மத்தியில் சகோதரத்துவத்தை ஏற்படுத்தினார்கள். அவர்களில் ஒருவர் (போர்க்களத்தில்) வீர மரணம் அடைந்தார். மற்றொருவர் சில நாட்கள் கழித்து (இயற்கையாக) மரணமடைந்தார். நாங்கள் (இரண்டாவதாக) இறந்தவரை அடக்கம் செய்த பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், “நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்று கேட்டார்கள்.

நாங்கள், “அவருக்காக துஆ செய்தோம். ‘இறைவா! அவரை மன்னித்து அவரது தோழருடன் சேர்ப்பாயாக!’ என்று கூறினோம்” என்றோம்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரது தொழுகைக்கும் இவரது தொழுகைக்கும், அவரது செயலுக்கும் இவரது செயலுக்கும் இடையே எவ்வளவு பெரிய வித்தியாசம் இருக்கிறது தெரியுமா? நிச்சயமாக, அவர்களுக்கு மத்தியில் வானத்திற்கும் பூமிக்கும் இடையே உள்ள தூரம் போன்ற வேறுபாடு இருக்கிறது” என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் மைமூன் அல்அவ்தீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இதை எனக்கு அறிவித்த நபித்தோழர் (மற்றொரு நபித்தோழரிடமிருந்து) நபியின் சொல்லாக அறிவிப்பளர்தொடரைக் கூறியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.