«إِسْبَاغُ الْوُضُوءِ شَطْرُ الْإِيمَانِ، وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَالتَّسْبِيحُ وَالتَّكْبِيرُ يَمْلَأُ السَّمَوَاتِ وَالْأَرْضَ، وَالصَّلَاةُ نُورٌ، وَالزَّكَاةُ بُرْهَانٌ، وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ»
2437. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உளூவை முழுமையாகச் செய்வது இறைநம்பிக்கையில் பாதியாகும்.
‘அல்ஹம்துலில்லாஹ்’ (அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்பது (நன்மையால்) தராசை நிரப்பும். ‘ஸுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூய்மையானவன்) மற்றும் ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) ஆகிய துதிகள் வானங்கள் மற்றும் பூமியிலுள்ள இடைவெளிகளை நிரப்பும்.
தொழுகை ஒரு பிரகாசமாகும். ஜகாத் ஓர் ஆதாரமாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும்.
குர்ஆன் உமக்கு ஆதரவாக அல்லது உமக்கு எதிராக சாட்சியமாகும்.
அறிவிப்பவர்: அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)