🔗

நஸாயி: 2562

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

ثَلَاثَةٌ لَا يَنْظُرُ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمَرْأَةُ الْمُتَرَجِّلَةُ، وَالدَّيُّوثُ، وَثَلَاثَةٌ لَا يَدْخُلُونَ الْجَنَّةَ: الْعَاقُّ لِوَالِدَيْهِ، وَالْمُدْمِنُ عَلَى الْخَمْرِ، وَالْمَنَّانُ بِمَا أَعْطَى


பாடம்:

கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.

2562. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று நபர்களை அல்லாஹ் மறுமை நாளில் (கருணைக் கண்கொண்டு) பார்க்க மாட்டான்.

1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவன்.
2. ஆண்களைப் போன்று வேடமிடக்கூடிய பெண்.
3. தன்னுடைய மனைவி தவறான நடத்தை கொண்டவளாக இருப்பதை அறிந்தும் ரோஷம் கொள்ளாத கணவன் ஆகியோராவர்.

இன்னும் மூன்று நபர்கள் சுவர்க்கம் புகமாட்டார்கள்.

1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவன்.
2. நிரந்தரமாக மது அருந்துபவன்.
3. கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)