«رُدُّوا السَّائِلَ وَلَوْ بِظِلْفٍ – فِي حَدِيثِ هَارُونَ – مُحْرَقٍ»
பாடம்:
யாசிப்பவருக்கு ஏதேனும் கொடுத்தாவது அனுப்பிவைத்தல்.
2565. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாசிப்பவரிடம் (இல்லையென்று கூறாமல்) அவருக்கு (கால்நடைப் பிராணியின்) கால்குளம்பை கொடுத்தாவது அனுப்பிவையுங்கள்.
அறிவிப்பவர்: உம்மு புஜைத் (ரலி)
இந்தச் செய்தி இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. இவற்றில் ஹாரூன் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “கரிந்த கால்குளம்பு” என்று இடம்பெற்றுள்ளது.