உமைர் பின் ஸலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக (தனது தோழர்களுடன்) மக்காவை நோக்கி புறப்பட்டுச் சென்றார்கள். (வழியில்) ரவ்ஹா எனுமிடத்தில் ஒரு காயப்படுத்தப்பட்ட காட்டுக் கழுதையைக் கண்டார்கள். (அது நகரமுடியாமல் கிடந்தது). இதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கூறப்பட்டபோது அவர்கள், “அதை விட்டுவிடுங்கள். (அதை வேட்டையாடிய) அதன் உரிமையாளர் இங்கு வரக்கூடும் என்று கூறினார்கள்.
சிறிது நேரத்தில் அதன் உரிமையாளரான (ஸைத் பின் கஅப்) அல்பஹ்ஸீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். மேலும் அவர் அல்லாஹ்வின் தூதரே! ஸல்லல்லாஹு அலைக வ ஸல்லம (அல்லாஹ் உங்கள் புகழை உயர்த்தி அருள் புரிந்து, உங்களுக்கு நிம்மதி அளிப்பானாக) என்று கூறிவிட்டு, “இதை நீங்களே (உணவாக) வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். எனவே நபி (ஸல்) அவர்கள் அதை தோழர்களுக்கு பங்கிடுமாறு அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்.
பிறகு அவர்கள் புறப்பட்டு ருவைஸா எனும் இடத்துக்கும் அர்ஜ் எனும் இடத்துக்கும் இடைப்பட்ட உஸாயா எனும் இடத்துக்கு வந்தார்கள். அங்கு ஒரு (பாறையின்) நிழலில் மான் ஒன்று சுருண்டு (தூங்கிக் கொண்டவாறு) இருந்தது. அங்கு ஒரு அம்பும் கிடந்தது. (அல்லது அம்புப்பட்டு கொல்லப்பட்டுக் கிடந்தது…)
உடனே நபி (ஸல்) அவர்கள், அந்த இடத்தை விட்டு அனைவரும் கடக்கும் வரை மக்களில் யாரும் அதன்பக்கம் சென்று அதற்கு தொல்லை தரக்கூடாது என்பதற்காக அங்கு ஒருவரை நிற்குமாறு ஏவினார்கள்.
(நஸாயி: 2818)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، وَالْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ وَاللَّفْظُ لَهُ عَنْ ابْنِ الْقَاسِمِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ عُمَيْرِ بْنِ سَلَمَةَ الضَّمْرِيِّ أَنَّهُ أَخْبَرَهُ، عَنْ الْبَهْزِيِّ،
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” خَرَجَ يُرِيدُ مَكَّةَ وَهُوَ مُحْرِمٌ حَتَّى إِذَا كَانُوا بِالرَّوْحَاءِ إِذَا حِمَارُ وَحْشٍ عَقِيرٌ، فَذُكِرَ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «ودَعُوهُ فَإِنَّهُ يُوشِكُ أَنْ يَأْتِيَ صَاحِبُهُ» فَجَاءَ الْبَهْزِيُّ وَهُوَ صَاحِبُهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْكَ وَسَلَّمَ شَأْنَكُمْ بِهَذَا الْحِمَارِ، «فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْرٍ فَقَسَّمَهُ بَيْنَ الرِّفَاقِ، ثُمَّ مَضَى حَتَّى إِذَا كَانَ بِالْأُثَايَةِ، بَيْنَ الرُّوَيْثَةِ وَالْعَرْجِ، إِذَا ظَبْيٌ حَاقِفٌ فِي ظِلٍّ وَفِيهِ سَهْمٌ، فَزَعَمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَمَرَ رَجُلًا يَقِفُ عِنْدَهُ لَا يُرِيبُهُ أَحَدٌ مِنَ النَّاسِ، حَتَّى يُجَاوِزَهُ»
Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-2768.
Nasaayi-Shamila-2818.
Nasaayi-Alamiah-2768.
Nasaayi-JawamiulKalim-2783.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . நஸாயீ பிறப்பு ஹிஜ்ரி 215
இறப்பு ஹிஜ்ரி 303
வயது: 88
இமாம்
2 . முஹம்மத் பின் ஸலமா, 3 . ஹாரிஸ் பின் மிஸ்கீன்
4 . அப்துர்ரஹ்மான் பின் காஸிம்
5 . மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம்
6 . யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்அன்ஸாரீ
7 . முஹம்மத் பின் இப்ராஹீம்
8 . ஈஸா பின் தல்ஹா
9 . உமைர் பின் ஸலமா (ரலி)
10 . ஸைத் பின் கஅப் அல்பஹ்ஸீ (ரலி)
இந்தச் செய்தியின் வாக்கிய அமைப்பைப் பார்க்கும்போது இதை அறிவிப்பவர் உமைர் பின் ஸலமா (ரலி) அவர்கள் ஆவார் என்று தெரிகிறது. எனவே பஹ்ஸீ (ரலி) அவர்கள் வரை அறிவிப்பாளர்தொடர் இருப்பது சரியானதல்ல.
الاستذكار (4/ 128):
قَالَ أَبُو عُمَرَ لَمْ يُخْتَلَفْ عَلَى مَالِكٍ فِي إِسْنَادِ هَذَا الْحَدِيثِ وَاخْتَلَفَ أَصْحَابُ يَحْيَى بْنِ سَعِيدٍ فيه على يحيى بن سعيد
ورواه جَمَاعَةٌ كَمَا رَوَاهُ مَالِكٌ وَرَوَاهُ حَمَّادُ بْنُ زيد وَهُشَيْمٌ وَيَزِيدُ بْنُ هَارُونَ وَعَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ يَحْيَى عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ عَنْ عُمَيْرِ بْنِ سَلَمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم
وَقَدْ ذَكَرْنَا الْأَسَانِيدَ عَنْهُمْ بِذَلِكَ فِي التَّمْهِيدِ
وَالْقَوْلُ عِنْدِي قَوْلُ مَنْ جَعَلَ الْحَدِيثَ لِعُمَيْرِ بْنِ سَلَمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم كَمَا قَالَ حَمَّادُ بْنُ زَيْدٍ وَمَنْ تَابَعَهُ
மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அவர்களின் மாணவர்கள் இவ்வாறே இதை அறிவித்துள்ளனர். இதுபோன்று, மாலிக் பிறப்பு ஹிஜ்ரி 93
இறப்பு ஹிஜ்ரி 179
வயது: 86
முஅத்தா மாலிக் நூலாசிரியர்; மதீனாவைச் சேர்ந்தவர்; பலமானவர்களிடமிருந்தே ஹதீஸை அறிவிப்போம் என்ற கொள்கையுடையவர்களில் ஒருவர்.இமாம் அவர்களின் ஆசிரியரான யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்அன்ஸாரீ அவர்களிடமிருந்து வேறுசிலரும் அறிவித்துள்ளனர்.
ஆனால் யஹ்யா பின் ஸயீத் பிறப்பு ஹிஜ்ரி 120
இறப்பு ஹிஜ்ரி 168 / 198
ஷுஅபா அவர்களின் மாணவர், அறிவிப்பாளர்களை விமர்சிப்பதில் கடினப்போக்குடையவர்.அல்அன்ஸாரீ அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹம்மாத் பின் ஸைத், ஹுஷைம், யஸீத் பின் ஹாரூன், அலீ பின் முஸ்ஹிர் போன்றோர் இதை உமைர் பின் ஸலமா (ரலி) அவர்களின் செய்தியாகவே அறிவித்துள்ளனர். இது தான் சரியானது என்று இப்னு அப்துல்பர் அவர்கள் கூறியுள்ளார்.
(நூல்: அல்இஸ்தித்கார்-4/128)
இப்னு உயைனா அவர்கள் இந்தச் செய்தியை தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) அவர்களின் செய்தியாக அறிவித்துள்ளார். இது பற்றி இப்னுல்மதீனீ அவர்களே இப்னு உயைனா அவர்களிடம் கூறிய தகவலையும், அதற்கு இப்னு உயைனா அவர்கள் கூறியதையும் கதீப் பஃக்தாதீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
الأسماء المبهمة في الأنباء المحكمة (6/ 420):
رَوَاهُ سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ قَالَ: عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِيهِ، وَإِنَّمَا رَوَى عِيسَى بْنُ طَلْحَةَ هذا الحديث عن عمير بْنِ ثَابِتٍ الضَّمْرِيِّ،
وَقَدْ أَخْبَرَنَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ قَالَ: قُلْتُ لِسُفْيَانَ لَمَّا أَثْبَتَ هَذَا الْحَدِيثَ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ عَنْ أَبِيهِ: إنه فِي كتاب الثقفي عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ عَنْ عُمَيْرِ بْنِ سَلَمة عن البهزي} قَالَ سُفْيَان: ظننت إنه عن طلحة ولست استيقنه. فأمَّا الحديث فقد حدثك به.
அலீ பின் மதீனீ (இப்னுல் மதீனீ) அவர்கள் கூறியதாவது:
ஸுஃப்யான் பின் உயைனா பிறப்பு ஹிஜ்ரி 107
இறப்பு ஹிஜ்ரி 198
வயது: 91
அவர்கள் இந்தச் செய்தியை, யஹ்யா பின் ஸயீத் —> முஹம்மத் பின் இப்ராஹீம் —> ஈஸா பின் தல்ஹா —> தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்தபோது நான் அவர்களிடம் இந்தச் செய்தி அஸ்ஸகஃபீ அவர்களின் நூலில் யஹ்யா பின் ஸயீத் —> முஹம்மத் பின் இப்ராஹீம் —> ஈஸா பின் தல்ஹா —> உமைர் பின் ஸலமா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் உள்ளதே என்றும் (மற்றவர்கள் உங்களுக்கு மாற்றமாக அறிவித்துள்ளனரே என்றும்) கேட்டேன். அதற்கு இப்னு உயைனா அவர்கள், இதை அறிவிப்பவர் தல்ஹா (ரலி) அவர்கள் என்றே நான் எண்ணினேன். ஆனால் அதை உறுதியாக எண்ணவில்லை. (இதன் உண்மையான செய்தி) உங்களுக்கு கிடைத்த அந்த செய்திதான் என்று கூறினார்.
(நூல்: அல்அஸ்மாஃ-6/420)
علل الدارقطني = العلل الواردة في الأحاديث النبوية (4/ 209)
515- وَسُئِلَ عَنْ حَدِيثِ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم أَعْطَاهُ حِمَارَ وَحْشٍ وَهُوَ مُحْرِمٌ، فَقَالَ: اقْسِمْهُ فِي الرِّفَاقِ.
فَقَالَ: هُوَ حَدِيثٌ تَفَرَّدَ بِهِ ابن عيينة، عن يحيى بن سعيد، عن مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عِيسَى بْنِ طَلْحَةَ، عَنْ طَلْحَةَ. وَوَهِمَ فِيهِ.
وَغَيْرُهُ يَرْوِيهِ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، وَيُسْنِدُهُ عَنْ عُمَيْرِ بْنِ سَلَمَةَ الضَّمْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ.
وَبَعْضُهُمْ قَالَ: عَنْ عُمَيْرِ بْنِ سَلَمَةَ، عَنْ رَجُلٍ مِنْ بَهْزٍ.
وَالصَّوَابُ قَوْلُ مَنْ قَالَ: عُمَيْرُ بْنُ سَلَمَةَ.
كَذَلِكَ رَوَاهُ يَزِيدُ بْنُ الْهَادِ، وَعَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ، وَيَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ …
இந்தச் செய்தியின் பல அறிவிப்பாளர்தொடர்களைக் கூறிய தாரகுத்னீ பிறப்பு ஹிஜ்ரி 306
இறப்பு ஹிஜ்ரி 385
வயது: 79
அவர்கள், இந்தச் செய்தியை உமைர் பின் ஸலமா (ரலி) அவர்களின் செய்தியாக அறிவித்தவர்களே சரியாக அறிவித்துள்ளனர் என்று கூறியுள்ளார்.
(நூல்: அல்இலலுல் வாரிதா-515)
இவ்வாறே யஃகூப் பின் ஷைபா,பிறப்பு ஹிஜ்ரி 182
இறப்பு ஹிஜ்ரி 262
வயது: 80
அபூஹாதிம்,பிறப்பு ஹிஜ்ரி 195
இறப்பு ஹிஜ்ரி 277
வயது: 82
மிஸ்ஸீ இமாம், இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)போன்ற பலரும் இந்தத் தகவலை கூறியுள்ளனர்.
(நூல்கள்: இலலுல் ஹதீஸ்-898, துஹ்ஃபதுல் அஷ்ராஃப்-4/216-218, அன்னிகதுள் ளிராஃப்)
1 . இந்தக் கருத்தில் ஸைத் பின் கஅப் அல்பஹ்ஸீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- உமைர் பின் ஸலமா (ரலி) —> ஸைத் பின் கஅப் அல்பஹ்ஸீ (ரலி)
பார்க்க: மாலிக்-1008, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-8339, குப்ரா நஸாயீ-3786, நஸாயீ-2818, இப்னு ஹிப்பான்-5111, அல்முஃஜமுல் கபீர்-, குப்ரா பைஹகீ-,
…
- ஈஸா பின் தல்ஹா —> உமைர் பின் ஸலமா (ரலி)
பார்க்க: அஹ்மத்-15450, அல்ஆஹாத் வல்மஸானீ-1382, குப்ரா நஸாயீ-4837, குப்ரா நஸாயீ-4344, ஷரஹ் மஆனில் ஆஸார்-3808, இப்னு ஹிப்பான்-5112, ஹாகிம்-, குப்ரா பைஹகீ-18915, …
- ஈஸா பின் தல்ஹா —> உமைர் பின் ஸலமா (ரலி) —> பஹ்ஸ் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதர்
பார்க்க: அஹ்மத்-, ஷரஹ் மஆனில் ஆஸார்-, குப்ரா பைஹகீ-,
- ஈஸா பின் தல்ஹா —> தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)
பார்க்க: இப்னு மாஜா-3092, மதாலிபுல் ஆலியா-, …
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: புகாரி-1821,
சமீப விமர்சனங்கள்