🔗

நஸாயி: 502

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

 قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم: هَذَا جِبْرِيلُ عليه السلام جَاءَكُمْ يُعَلِّمُكُمْ دِينَكُمْ، فَصَلَّى الصُّبْحَ حِينَ طَلَعَ الْفَجْرُ، وَصَلَّى الظُّهْرَ حِينَ زَاغَتِ الشَّمْسُ، ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ رَأَى الظِّلَّ مِثْلَهُ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ حِينَ غَرَبَتِ الشَّمْسُ، وَحَلَّ فِطْرُ الصَّائِمِ، ثُمَّ صَلَّى الْعِشَاءَ حِينَ ذَهَبَ شَفَقُ اللَّيْلِ، ثُمَّ جَاءَهُ الْغَدَ، فَصَلَّى بِهِ الصُّبْحَ حِينَ أَسْفَرَ قَلِيلًا، ثُمَّ صَلَّى بِهِ الظُّهْرَ حِينَ كَانَ الظِّلُّ مِثْلَهُ، ثُمَّ صَلَّى الْعَصْرَ حِينَ كَانَ الظِّلُّ مِثْلَيْهِ، ثُمَّ صَلَّى الْمَغْرِبَ بِوَقْتٍ وَاحِدٍ حِينَ غَرَبَتِ الشَّمْسُ، وَحَلَّ فِطْرُ الصَّائِمِ، ثُمَّ صَلَّى الْعِشَاءَ حِينَ ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيْلِ، ثُمَّ قَالَ: الصَّلَاةُ مَا بَيْنَ صَلَاتِكَ أَمْسِ، وَصَلَاتِكَ الْيَوْمَ

 


பாடம்:

ளுஹர் தொழுகை நேரம் முடிவடைவதைப் பற்றிய பாடம்.

502. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். உங்களுக்கு உங்கள் மார்க்கத்தைக் கற்றுக்கொடுப்பதற்காக இவர் உங்களிடம் வந்துள்ளார். அவர் அதிகாலை வைகறை-ஃபஜ்ர் தோன்றியபோது சுப்ஹ் தொழுதார். சூரியன் உச்சியை விட்டுச் சாய்ந்தபோது ளுஹ்ர் தொழுதார். ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்திற்குச் சமமானதை அவர் கண்டபோது அஸர் தொழுதார். பின்னர் சூரியன் மறைந்து, நோன்பாளி நோன்பு திறக்கும் நேரம் வந்தபோது மஃரிப் தொழுதார். பின்னர் செவ்வானம் மறைந்ததும் இஷா தொழுதார். அடுத்த நாள் மீண்டும் நபிகளாரிடம் வந்து, சற்று வெளிச்சம் பரவியதும் சுப்ஹ் தொழுதார். பின்னர் ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்திற்குச் சமமானபோது ளுஹ்ர் தொழுதார். பின்னர் ஒரு பொருளின் நிழல் அதன் உயரத்தை விட இரு மடங்கானபோது அஸ்ர் தொழுதார். பின்னர் நேற்றைய அதே நேரத்தில், சூரியன் மறைந்து நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் மஃரிப் தொழுதார். பின்னர் இரவில் சிறிது நேரம் கழிந்ததும் இஷா தொழுதார். அதன்பின் ஜிப்ரீல் அலை அவர்கள் ‘தொழுகைக்கான நேரம் என்பது, நேற்று நீங்கள் தொழுத ஆரம்ப நேரத்திற்கும் இன்று நீங்கள் தொழுத முடிவுறும் நேரத்திற்கும் இடைப்பட்டதாகும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)