«صَلَّيْنَا مَعَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ الظُّهْرَ، ثُمَّ خَرَجْنَا حَتَّى دَخَلْنَا عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَوَجَدْنَاهُ يُصَلِّي الْعَصْرَ، قُلْتُ: يَا عَمِّ، مَا هَذِهِ الصَّلَاةُ الَّتِي صَلَّيْتَ؟ قَالَ: الْعَصْرَ، وَهَذِهِ صَلَاةُ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم الَّتِي كُنَّا نُصَلِّي».
பாடம்:
அஸர் தொழுகையை விரைந்து தொழுவது
509.
நாங்கள் உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களுடன் லுஹ்ர் தொழுகையைத் தொழுதோம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுது கொண்டிருந்தார்கள். நான், என் பெரிய தந்தையே நீங்கள் தொழுத இந்தத் தொழுகை என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அஸ்ர் தொழுகை என்று சொன்னார்கள் . நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது வந்த தொழுகை இதுதான் என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூ உமாமா பின் ஸஹ்ல் (ரலி)