«صَلَّيْنَا فِي زَمَانِ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، ثُمَّ انْصَرَفْنَا إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ، فَوَجَدْنَاهُ يُصَلِّي، فَلَمَّا انْصَرَفَ قَالَ لَنَا: صَلَّيْتُمْ؟ قُلْنَا: صَلَّيْنَا الظُّهْرَ قَالَ: إِنِّي صَلَّيْتُ الْعَصْرَ، فَقَالُوا لَهُ: عَجَّلْتَ، فَقَالَ: إِنَّمَا أُصَلِّي كَمَا رَأَيْتُ أَصْحَابِي يُصَلُّونَ».
பாடம்:
அஸ்ர் தொழுகையை விரைவாகத் தொழுதல்.
510. உமர் இப்னு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் காலத்தில் நாங்கள் தொழுதோம். பின்னர் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் தொழுகையை முடித்ததும், ‘நீங்கள் தொழுதுவிட்டீர்களா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘நாங்கள் லுஹ்ர் தொழுதோம்’ என்று கூறினோம் . அதற்கு அவர்கள், ‘நான் அஸ்ர் தொழுதுவிட்டேன்’ என்றார்கள். அதைக் கேட்ட அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘நீங்கள் அஸ்ரை சீக்கிரமாகத்-ஆரம்ப நேரத்திலேயே தொழுதுவிட்டீர்கள்’ என்று கூறினார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், நான் என் தோழர்கள் -ஸஹாபாக்கள் தொழுவதைப் பார்த்த முறையில்தான் தொழுகிறேன் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரஹ்)