قَدِمْتُ مَعَ عُمُومَتِي الْمَدِينَةَ فَدَخَلْتُ حَائِطًا مِنْ حِيطَانِهَا، فَفَرَكْتُ مِنْ سُنْبُلِهِ، فَجَاءَ صَاحِبُ الْحَائِطِ فَأَخَذَ كِسَائِي وَضَرَبَنِي، فَأَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْتَعْدِي عَلَيْهِ، فَأَرْسَلَ إِلَى الرَّجُلِ، فَجَاءُوا بِهِ فَقَالَ: «مَا حَمَلَكَ عَلَى هَذَا؟» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ دَخَلَ حَائِطِي، فَأَخَذَ مِنْ سُنْبُلِهِ فَفَرَكَهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا عَلَّمْتَهُ إِذْ كَانَ جَاهِلًا، وَلَا أَطْعَمْتَهُ إِذْ كَانَ جَائِعًا، ارْدُدْ عَلَيْهِ كِسَاءَهُ»، وَأَمَرَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَسْقٍ أَوْ نِصْفِ وَسْقٍ
5409. அப்பாத் பின் ஷுரஹ்பீல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(பஞ்சம் ஏற்பட்ட ஒரு நேரத்தில்) நான் எனது தந்தையின் சகோதரர்களுடன் மதீனாவுக்கு வந்தேன். அப்போது நான் அங்கிருந்த ஒரு தோட்டத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த கதிர்களைத் தேய்த்து (விதை எடுத்து) உண்டேன். அப்போது தோட்டத்தின் உரிமையாளர் வந்து, எனது மேலாடையைப் பறித்துக் கொண்டு என்னை அடித்தார்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இது குறித்து முறையிட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரை அழைத்து வர ஆள் அனுப்பினார்கள். அவர் அழைத்து வரப்பட்டார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “நீ ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “அல்லாஹ்வின் தூதரே! அவர் எனது தோட்டத்திற்குள் நுழைந்து கதிர்களைத் தேய்த்துப் பாழாக்கினார்” என்றார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த உரிமையாளரை நோக்கி), “அவர் அறியாதவராக இருந்தபோது அவருக்கு நீ கற்றுக் கொடுக்கவில்லையே! அவர் பசியோடு இருந்தபோது அவருக்கு நீ உணவளிக்கவில்லையே!” என்று கூறிவிட்டு, “அவரது ஆடையைத் திருப்பிக் கொடுத்துவிடு” என்று கட்டளையிட்டார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு ஒரு ‘வஸ்க்’ அல்லது அரை ‘வஸ்க்’ (உணவு தானியம்) வழங்குமாறு உத்தரவிட்டார்கள்.