لَا أُعَلِّمُكُمْ إِلَّا مَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعَلِّمُنَا يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَالْهَرَمِ، وَعَذَابِ الْقَبْرِ، اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا، وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا، أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لَا يَخْشَعُ، وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ، وَعِلْمٍ لَا يَنْفَعُ، وَدَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا»
பாடம்:
இயலாமையை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுதல்.
5458. ஸைத் பின் அர்கம் (ரலி) கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கற்றுக்கொடுத்ததைத் தவிர வேறெதையும் நான் உங்களுக்கு கற்றுத்தரமாட்டேன்.
அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மினல் அஜ்ஸி, வல்கசலி, வல்ஜுப்னி, வல் புக்லி, வல்ஹரமி, வ அதாபில் கப்ர். அல்லாஹும்ம! ஆத்தி நஃப்சீ தக்வாஹா, வ ஸக்கிஹா, அன்த்த கைரு மன் ஸக்காஹா. அன்த்த வலிய்யுஹா வ மவ்லாஹா. அல்லாஹும்ம! இன்னீ அஊது பிக்க மின் கல்பின் லா யக்ஷஉ , வ மின் நஃப்சின் லா தஷ்பஉ, வ இல்மின் லா யன்ஃபஉ, வ தஅவத்தின் லா யுஸ்தஜாபு லஹா.
(பொருள்: இறைவா! இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், வயோதிகம், மண்ணறை வேதனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
இறைவா! என் உள்ளத்தில் இறையச்சத்தை ஏற்படுத்து. மேலும் அதை நீ தூய்மைப்படுத்து. சிறந்த முறையில் அதை தூய்மையாக்குபவன் நீ தான். அதற்குப் பொறுப்பாளனும் நீ தான்.
இறைவா (இறை)அச்சமில்லாத உள்ளம், திருப்திகொள்ளாத மனம், பலனில்லாத கல்வி, பதிலளிக்கப்படாத பிரார்த்தனை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத்தேடுகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.