«تَعَوَّذُوا بِاللَّهِ، مِنْ جَارِ السَّوْءِ فِي دَارِ الْمُقَامِ، فَإِنَّ جَارَ الْبَادِيَةِ يَتَحَوَّلُ عَنْكَ»
பாடம்:
தீய அண்டை வீட்டாரை விட்டுப் பாதுகாப்புத் தேடுதல்.
5502. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிலையான வசிப்பிடத்தில் உள்ள தீய அண்டை வீட்டாரை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுங்கள். ஏனெனில், (பயணம் செய்து வந்துள்ள) கிராமப்புறத்து அண்டை வீட்டாரோ உங்களை விட்டு (இடம் பெயர்ந்து) சென்றுவிடுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)