أَنَّ ابْنَ الدَّيْلَمِيِّ رَكِبَ يَطْلُبُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ، قَالَ: ابْنُ الدَّيْلَمِيِّ: فَدَخَلْتُ عَلَيْهِ، فَقُلْتُ: هَلْ سَمِعْتَ يَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَكَرَ شَأْنَ الْخَمْرِ بِشَيْءٍ، فَقَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَشْرَبُ الْخَمْرَ رَجُلٌ مِنْ أُمَّتِي فَيَقْبَلُ اللَّهُ مِنْهُ صَلَاةً أَرْبَعِينَ يَوْمًا»
5664. உர்வா பின் ருவைம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னுத் தைலமீ (அப்துல்லாஹ் பின் ஃபைரோஸ்) (ரஹ்) அவர்கள், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் சந்திப்பதற்காக பயணம் சென்றார்.
பிறகு அவர்கள் கூறியதாவது:
நான், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதுவைப்பற்றி ஏதும் கூறியதை தாங்கள் செவியேற்றுள்ளீர்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள், ஆம். “எனது சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் மது அருந்தினால் அவரின் நாற்பது நாட்களின் தொழுகையை அல்லாஹ் ஏற்றுக்கொள்ளமாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.