🔗

நஸாயி: 693

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَنَّ سُلَيْمَانَ بْنَ دَاوُدَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَنَى بَيْتَ الْمَقْدِسِ سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ خِلَالًا ثَلَاثَةً: سَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ حُكْمًا يُصَادِفُ حُكْمَهُ فَأُوتِيَهُ، وَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ مُلْكًا لَا يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِهِ فَأُوتِيَهُ، وَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ حِينَ فَرَغَ مِنْ بِنَاءِ الْمَسْجِدِ أَنْ لَا يَأْتِيَهُ أَحَدٌ لَا يَنْهَزُهُ إِلَّا الصَّلَاةُ فِيهِ أَنْ يُخْرِجَهُ مِنْ خَطِيئَتِهِ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ


693. சுலைமான் நபி அவர்கள் பைத்துல் முகத்தஸைக் கட்டிய பிறகு மூன்று நற்பேறுகளை மகத்தவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ்விடம் கேட்டார்கள். (அவை:) உண்மையான ஞானத்தை (பொருத்தமான தீர்ப்பை) கேட்டார்கள். அது வழங்கப்பட்டது. (மேலும், மகத்துவமும் மாண்பும் கொண்ட அல்லாஹ்விடம்) தமக்குப் பிறகு யாருக்கும் வழங்கப்படாத ஆட்சியதிகாரத்தைக் கேட்டார்கள். அதுவும் வழங்கப்பட்டது. மஸ்ஜிதைக் கட்டிய பிறகு அல்லாஹ்விடம், எவரும் இங்கு தொழுகையைத் தவிர வேறெந்த வலிமையும் பெறக்கூடாது; அத்தொழுகை மூலம் அவரது தாய் அவரைப் பெற்றெடுத்த தினத்தைப்போன்று அவர் தமது பாவங்களில் இருந்து வெளியேற வேண்டும் என்று கேட்டார்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)