🔗

நஸாயி: 694

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«صَلَاةٌ فِي مَسْجِدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ مِنَ الْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ؛ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ آخِرُ الْأَنْبِيَاءِ , وَمَسْجِدَهُ آخِرُ الْمَسَاجِدِ»

قَالَ أَبُو سَلَمَةَ وَأَبُو عَبْدِ اللَّهِ: لَمْ نَشُكَّ أنَّ أَبَا هُرَيْرَةَ كَانَ يَقُولُ عَنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , فَمَنَعَنَا أنْ نَسْتَثْبِتَ أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ الْحَدِيثِ , حَتَّى إِذَا تُوُفِّيَ أَبُو هُرَيْرَةَ ذَكَرْنَا ذَلِكَ وَتَلَاوَمْنَا أَنْ لَا نَكُونَ كَلَّمْنَا أَبَا هُرَيْرَةَ فِي ذَلِكَ حَتَّى يُسْنِدَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنْ كانَ سَمِعَهُ مِنْهُ , فَبَيْنَا نَحْنُ عَلَى ذَلِكَ جَالَسْنَا عَبْدَ اللَّهِ بْنَ إِبْرَاهِيمَ بْنِ قَارِظٍ , فَذَكَرْنَا ذَلِكَ الْحَدِيثَ , وَالَّذِي فرَّطْنَا فِيهِ مِنْ نَصِّ أَبِي هُرَيْرَةَ فَقَالَ لَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِبْرَاهِيمَ: أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَإِنِّي آخِرُ الْأَنْبِيَاءِ , وَإِنَّهُ آخِرُ الْمَسَاجِدِ»


694. மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடைசி நபியாவார்கள். அவர்களின் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியும் கடைசியாகும் என்று அபூ ஹுரைரா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: அபூஸலமா (ரஹ்), அபூ அப்துல்லாஹ் ஸல்மான் (ரஹ்)

அபூ ஹுரைரா (ரலி) அவர்களின் மற்றொரு மாணவர் அப்துல்லாஹ் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள், இந்த செய்தியை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்ததை நான் கேட்டுள்ளேன் என்று நான் சாட்சி கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு: மஸ்ஜிதுந் நபவீ கடைசி பள்ளிவாசல் என்பதின் பொருள், சிறப்புமிக்க மூன்று பள்ளிவாசல்களில் கடைசி பள்ளிவாசல் என்பதாகும் என்று சிலர் கூறியுள்ளனர்.