🔗

நஸாயி: 902

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُمَا يَسْتَفْتِحُونَ الْقِرَاءَةَ بِ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]


பாடம்:

(துணை) ஸூராவிற்கு முன் திருக்குர்ஆனின் தோற்றுவாயை (ஓதி) ஆரம்பித்தல்.

902. நபி (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)