فَذَكَرَ مِثْلَهُ.
497.
அபூஜஃபர்-தஹாவீ இமாம் கூறுகிறார்:
இந்த ஹதீஸின் மூலம் நாடப்பட்ட கருத்து என்ன? என்பதை நாம் கண்டறிவதற்காகவும், ‘இதன் பொருள், நாட்களின் எண்ணிக்கையில் ஏற்படும் குறைவுதான்’ என்று கூறுபவர்களின் கூற்றுப்படி இது அமைந்துள்ளதா? அல்லது இவ்விரு மாதங்களும் ஒரே நேரத்தில் (நாட்களின் எண்ணிக்கையில்) குறைந்துவிடுவதில்லை; மாறாக, ஒன்றில் குறைவு ஏற்படும்போது மற்றொன்றில் குறைவு ஏற்படுவதில்லை என்ற அடிப்படையில் அமைந்துள்ளதா? அல்லது, நாம் மேலே குறிப்பிட்ட இவ்விரு கருத்துகளுக்கும் மாறுபட்ட வேறொரு பொருளில் இது அமைந்துள்ளதா? என்பதைப் பற்றி நாம் ஆழமாகச் சிந்தித்தோம்.
அப்போது, கால ஓட்டத்தில் நாம் நடைமுறையில் கண்டுவரும் ஒரு விஷயத்தைக் கண்டறிந்தோம். அதாவது, இவ்விரு மாதங்களின் நாட்களின் எண்ணிக்கையில் ஏற்படும் குறைவானது, ஒன்றில் ஏற்பட்டு மற்றொன்றில் ஏற்படாமலும் இருக்கலாம்; அல்லது சில நேரங்களில் இவ்விரு மாதங்களிலுமே (ஒரே ஆண்டில்) குறைவு ஏற்படலாம் என்பதாகும். இதில் எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை.
மேலும், ரமளான் மாதத்தின் துவக்கத்திலும், அதன் இறுதியிலும் எத்தகைய வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் யாவும் இந்த உண்மை நிலையையே உறுதிப்படுத்துகின்றன.