🔗

sharh-mushkil-al-athar-501: 501

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

” إذَا جَاءَ رَمَضَانُ فَصُمْ ثَلَاثِينَ إلَّا أَنْ تَرَى الْهِلَالَ قَبْلَ ذَلِكَ


501.

 

 


இந்தச் செய்தியின் மூலம், ரமளான் மாதம் முப்பது நாட்களாகவும் இருக்கலாம், இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம் என்பதை நாம் புரிந்து கொண்டோம்.

எனவே, “இரண்டு பெருநாட்களின் மாதங்கள் குறையாது” என்ற நபியவர்களின் கூற்றின் பொருள் என்ன என்பதை நாம் அறிய வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போது நாம் கண்டறிந்ததாவது:

இந்த இரு மாதங்களும்—அதாவது ரமளான் மற்றும் துல்ஹிஜ்ஜா ஆகிய இரண்டும்—மற்ற மாதங்களை விட விசேஷமான அமைப்பைக் கொண்டிருக்கின்றன. ஏனெனில், இவற்றில் ஒன்றில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது, அது வேறு எந்த மாதத்திலும் இல்லை. மற்றொன்றில் ஹஜ் கடமையாக்கப்பட்டுள்ளது, அதுவும் வேறு எந்த மாதத்திலும் இல்லை.

எனவே, இந்த இரு மாதங்களும் இருபத்தொன்பது இருபத்தொன்பது நாட்களாக அமைந்துவிட்டால், முப்பது முப்பது நாட்களாக இருக்கும் போது கிடைக்கும் நன்மைகளை விட, இவற்றில் உள்ள நோன்பு மற்றும் ஹஜ் ஆகிய வணக்கங்களின் நன்மைகள் ஏதேனும் குறைந்துவிடுமோ என்ற சந்தேகம் மக்களின் உள்ளங்களில் ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்தது.

இதனால்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு விளக்கமளித்தார்கள்:

இந்த இரு மாதங்களும் (நாட்களின் எண்ணிக்கையில்) இருபத்தொன்பது இருபத்தொன்பது நாட்களாக இருந்தாலும், அவற்றில் நிறைவேற்றப்படும் இவ்விரு வணக்கங்களின் பலன்கள் மற்றும் நன்மைகளில் எந்தக் குறைவும் ஏற்படாது. அந்த மாதங்கள் முப்பது முப்பது நாட்களாக இருக்கும் போது இவ்விரு வணக்கங்களும் எவ்வாறு முழுமையைப் பெறுகின்றனவோ, அதே போன்றே அவை (நாட்களின் எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும் வணக்கங்களின் அடிப்படையில் முழுமையானவையே ஆகும்.


அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அல்பஸரீ என்பவர் இதற்கு மாற்றமாக வேறொரு கருத்தில் அறிவித்துள்ளார்…(பார்க்க: ஷரஹ் முஷ்கிலில் ஆஸார்-502)