🔗

shuabul-iman-1597: 1597

ஹதீஸின் தரம்: மவ்ளூவு - பொய்யான செய்தி

سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا حَدُّ الْعِلْمِ إِذَا بلغهُ الرَّجُلُ كَانَ فَقِيهًا؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” مَنْ حَفِظَ عَلَى أُمَّتِي أَرْبَعِينَ حَدِيثًا مِنْ أَمْرِ دِينِهَ بَعَثَهُ اللهُ فَقِيهًا، وَكُنْتُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ شَافِعًا وَشَهِيدًا


1597. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், “ஒரு மனிதர் எந்த அளவுக்கு அறிவை அடைந்தால், அவர் ஓர் (ஃபகீஃ) மார்க்க அறிஞராக கருதப்படுவார்?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் மார்க்க விஷயங்கள் தொடர்பான நாற்பது ஹதீஸ்களை யார் மனனம் செய்கிறாரோ, அவரை ஓர் மார்க்க அறிஞராக அல்லாஹ் எழுப்புவான். மேலும், மறுமை நாளில் நான் அவருக்கு பரிந்துரையாளனாகவும், சாட்சியாகவும் இருப்பேன்.