قَالَتْ: يَا رَسُولَ اللهِ، إِنْ وَافَقْتُ لَيْلَةَ الْقَدْرِ فَمَا أَقُولُ؟ قَالَ: ” قَوْلِي: اللهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي “
قَالَ يَزِيدُ: لَا أَعْلَمُهُ إِلَّا قَالَ: ” ثَلَاثًا
3426. அல்லாஹ்வின் தூதரே! நான் லைலத்துல் கத்ர் இரவை எதிர்கொண்டால் அதில் என்ன கூற வேண்டும்?’ என்று ஆயிஷா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ’ என்று சொல்! என்று கூறினார்கள்.
(பொருள்: ‘இறைவா! நீ மன்னிப்பவன், மன்னிப்பதை விரும்புகிறாய், எனவே நீ என்னை மன்னித்து விடு!)
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)
அறிவிப்பாளர் யஸீத் இந்த பிரார்த்தனையை மூன்று தடவை கூறவேண்டும் என்று கூறியதாக அறிவிக்கிறார்.